Kothagiri Makkal Kalloori

Kothagiri Makkal Kalloori
Vaaippu Irundhaal Meendum varuvom!

Saturday, August 1, 2009

பிரகாஷை பற்றி நாளை எழுதுவேன்!

கோத்தகிரி மக்கள் கல்லூரியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. நாம் சென்ற இடங்கள், படித்த பாடங்கள், பாடிய பாடல்கள், ஆடிய விளையாட்டுக்கள், நடித்த நாடகங்கள், தூங்கிய வகுப்பறைகள்... அனைத்தும் மறக்க முடியாதவையே!

மொத்தத்தில் அவை அனைத்தும் ஆனந்த கூத்துக்கள். எவ்வளவோ எழுத வேண்டும் என்று எனக்கு மெத்த ஆசை! உங்களில் சிலரைப்பற்றி நாளை முதல் எழுத தொடங்குகிறேன். ஆயினும் முதலாவதாக நம் அனைவரையும் பேசியே கவர்ந்துவிடும் வல்லமை படைத்த சத்தியமங்கல நாயகன் குட்டி பிரகாஷ் அவர்களைப்பற்றி எழுதுவேன். படிக்கத் தவறாதீர்கள்.

கோத்தகிரி மக்கள் கல்லூரி நண்பர்களே வருக வருக !

அன்பு கோத்தகிரி மக்கள் கல்லூரி நண்பர்களே !

பல மாதங்களாக நாம் அனைவரும் ஒன்றாக கூட வேண்டும் என சிந்தித்து வந்தோம். இப்போது அந்த வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. உங்கள் அனுபவங்களை இந்த வலை தளத்தின் வழியாக பகிர்ந்து கொள்ளலாம். தொடர்ந்து வருகின்ற நாட்களில் நமது கோத்தகிரி மக்கள் கல்லூரி அனுபவங்களை பற்றி சில பக்கங்களை இங்கு போஸ்ட் செய்கிறேன். உங்களுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை இங்கு நீங்கள் பார்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்களும் உங்களுடைய தற்போதைய அனுபவங்களையும் மக்கள் கல்லூரி அனுபவங்களையும் இந்த தளத்தில் பதிவு செய்யுங்கள். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.

மீண்டும் விரைவில் சந்திப்போம் .... சிந்திப்போம்.